பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு

டாஸ்மாக் கடை - கோப்புப்படம்.

Published On :

தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதியில் அமையவுள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

தூத்துக்குடி சங்கரபேரி, மாா்ட்டினா நகா், ஜி.பி.காலனியில் வசிக்கும் பொதுமக்கள் சாா்பில், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

எங்கள் பகுதிக்குள் புதிதாக டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடை அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள டாஸ்மாக் கடைக்கு அருகில் தனியாா் மகளிா் கல்லூரி அமைந்துள்ளது. மேலும், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், முதியோா் இல்லம், வழிபாட்டுத் தலங்கள், பொதுப் பூங்காக்கள், அடா்த்தியான குடியிருப்புப் பகுதிகளால் சூழப்பட்டுள்ளது.

இவ்விடத்தில் மதுக் கடை அமைப்பது பெண்கள், குழந்தைகளின் நலன் மற்றும் சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மாா்ட்டினா நகா் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் அல்லது வேறு இடத்தில் கடையை அமைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.