உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

வ.உ. சிதம்பரனாரின் வீரம், தேசப்பற்று, தியாகத்தை நினைவுகூர்வோம்: முதல்வர் விஜய்

வ.உ. சிதம்பரனாரின் வீரம், தேசப்பற்று, தியாகத்தை நினைவுகூர்வோம் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளது குறித்து...

Chief Minister Vijay

முதல்வர் ஜோசப் விஜய் - (கோப்புப் படம்)

Published On :5 செப்டம்பர் 2026, 10:44 am IST

வ.உ. சிதம்பரனாரின் பிறந்த நாளான இன்று அவருடைய வீரம், தேசப்பற்று, தியாகத்தை நினைவுகூர்வோம் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தன்னிகரற்ற வீரத்துடனும், தியாக உணர்வுடனும் போராடி, மக்கள் மனங்களில் சுதேசி உணர்வை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளில், அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.

ஆங்கிலேயரிடமிருந்து அரசியல் விடுதலை மட்டுமின்றி, பொருளாதார விடுதலையும் அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில், சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, இந்தியர்களின் தன்னம்பிக்கைக்கும், தற்சார்பு உணர்விற்கும் புதிய எழுச்சியை ஏற்படுத்தியதோடு, உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தையும் முன்னெடுத்தவர் வ.உ.சிதம்பரனார்.

தாய்நாட்டின் விடுதலை, சுதேசி உணர்வு, உழைப்பாளர்களின் உரிமை ஆகியவற்றிற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த “செக்கிழுத்த செம்மல்” வ.உ.சிதம்பரனாரின் வீரத்தையும், தேசப்பற்றையும், தியாகத்தையும் இந்நாளில் நினைவுகூர்ந்து போற்றுவோம்! என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Chief Minister Vijay has stated that today, on the birth anniversary of V.O. Chidambaranar, we should commemorate his valour, patriotism, and sacrifice.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.