FOLLOW US

ON GOOGLE DISCOVER

3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர்திறப்பு 10,000 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

Water release from Mettur Dam for irrigation increased....

மேட்டூர் அணை - கோப்பிலிருந்து

Published On :6 செப்டம்பர் 2026, 6:17 pm IST

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை (செப் 6) மாலை 7,000 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1 ஆம் தேதி முதல்வர் விஜய் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு முதற்கட்டமாக 3,000 கன அடி நீரை திறந்து வைத்தார்

இதையடுத்து 1 ஆம் தேதி மாலை நான்கு மணி அளவில் 4 ஆயிரம் கன அடியாகயும், இரவு 8 மணிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து திறந்துவிடப்பட்டது.

தற்போது டெல்டா பாசனப் பகுதிகளில் பாசனத் தேவை அதிகரித்துள்ளதாலும் கடைமடைக்கு தண்ணீர் சென்று சேரவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த ஐந்து நாள்களாக காவிரி டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பு வினாடிக்கு 7,000 கனஅடியாக இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் 10,000 கனஅடியாக அதிகரிப்பட்டுள்ளதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை(செப் 6) மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,075 கன அடியிலிருந்து 8,612 கன அடியாக அதிகரித்துள்ளது

அணையின் நீர் மட்டம் தற்போது 92.33 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 55.35 டிஎம்சியாக உள்ளது.

Water release from Mettur Dam for irrigation increased to 10,000 cubic feet per second.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.