
மேட்டூர் அணையை முதல்வர் திறந்துவைக்கும் நேரம் என்ன? வெளியான நிகழ்ச்சி நிரல்!
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி குறித்து...

மேட்டூர் அணை - படம்: தினமணி
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நாளை(செப். 1) முதல் 45 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
முதல்வர் சி. ஜோசப் விஜய் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார். இதனையொட்டி மேட்டூர் அணையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேட்டூர் அணையில் திண்டுக்கல் மாவட்ட டிஐஜி சசிமோகன் மற்றும் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் மேட்டூர் அணையை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர் .
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தண்ணீர் திறக்க உள்ள நிலையில் அணை முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேட்டூர் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிகழ்ச்சி நிரல் - படம்: தினமணி
இந்த நிலையில், முதல்வர் ஜோசப் விஜய் நாளை(செப். 1) காலை 12 மணிக்கு மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, மேட்டூர் அணையில் நீர்வளத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மேட்டூர் அணை குறித்த விளக்கப் புகைப்படக் கண்காட்சியை முதல்வர் பார்வையிடுகிறார்.
தொடர்ந்து, மேட்டூர் அணை மின் நிலையத்தைப் பார்வையிடும் முதல்வர் விஜய், அங்கிருந்து சேலம். காமலாபுரம் விமான நிலையம் புறப்படுகிறார். அங்கிருந்து, விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார்.
Water is being released from the Mettur Dam for irrigation in the Cauvery Delta for 45 days, starting tomorrow (September 1).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







