
மேட்டூர் அணை திறப்பு எப்போது? அமைச்சர் பதில்!
மேட்டூர் அணை திறப்பு குறித்து அமைச்சர் ஆனந்த் தெரிவித்தது பற்றி...

நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த் - படம்: சட்டப்பேரவை
மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும் என்று திமுக முன்னாள் அமைச்சர் கோவி. செழியன் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் இன்று(ஆக. 25) இயற்கை வளங்கள் துறை - தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை - தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறுகிறது.
சட்டப்பேரவை கேள்வி நேரத்தின்போது, மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும் என்று திமுக முன்னாள் அமைச்சர் கோவி. செழியன் அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
அவர் பேசும்போது, ”டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரியில் எப்போது தண்ணீர் திறக்கப்படும் என்று காத்திருக்கின்றனர். மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்? அரசு அறிவிக்க இயலுமா” என்றார்.
இதற்குப் பதலளித்த நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த், ”கூடிய விரைவில் நல்ல செய்தி அறிவிக்கப்படும்” என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, “ஜூன் 12 ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை, இது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் நேற்று விளக்கமாக தெரிவித்தார். டெல்டா விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேட்டூர் அணை நிரம்பி வருகிறது. சாம்பா சாகுபடிக்கு தண்ணீர் எப்போது திறக்கப்படும். 15 நாள்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். அப்போதுதான் நாற்றங்கால் பணி மேற்கொள்ளப்படும்” என்றார்.
Summary
Former DMK Minister Kovi. Chezhian raised a question in the Legislative Assembly regarding when the Mettur Dam would be opened.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





