2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்? - பதிலளிக்காமல் சென்ற அமைச்சர்!

மேட்டூர் அணை திறப்பு குறித்த கேள்விக்கு, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் பதிலளிக்காமல் சென்றது பற்றி...

When will the Mettur Dam be opened, Minister leaves without answering

அமைச்சர் வினோத் - DIN

Published On :

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்? கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? என்ற கேள்விகளை வேளாண் துறை அமைச்சர் வினோத் தவிர்த்துவிட்டுச் சென்றார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பு தொடர்பாக விவசாயிகளின் கருத்து கேட்புக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் கலந்து கொண்டார்.

கூட்டத்தினைத் தொடர்ந்து அமைச்சரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் வினோத்,

"கூட்டத்தில் தடுப்பணைகள் கட்டி தண்ணீரைத் தேக்குவது தொடர்பான ஆலோசனைகள் பெறப்பட்டது. விவசாயிகளுக்கான தட்கல் மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பட்ஜெட்டில் இதுகுறித்து அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. ஏரிகளைத் தூர்வாரி அதிகளவில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்" என்றார்.

பின்னர், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது எப்போது? கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தப்படுமா? என்பது குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் அவ்விடத்தை விட்டு புறப்பட்டுச் சென்றார்.

Summary

When will the Mettur Dam be opened, Minister leaves without answering

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.