ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

மேட்டூர் அணை நீர் திறப்பு எப்போது? அமைச்சர் வினோத் பதில்!

மேட்டூர் அணை நீர் திறப்பு குறித்து அமைச்சர் வினோத் தெரிவித்தது குறித்து...

News image

மேட்டூர் அணை. - (கோப்புப் படம்)

Updated On :12 ஜூன் 2026, 4:40 pm IST

மேட்டூர் அணையில் 70 அடி நீர் இருப்பதால், திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாக கட்டடத்தில் "மாம்பழ மேளா -2026" பிரத்யேக மாம்பழக் கண்காட்சியை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் தொடக்கி வைத்தார்.

இன்று முதல் ஜூன் 14ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாம்பழ கண்காட்சி மற்றும் விற்பனை நிலையத்தில், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திர பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல்வேறு வகையான மாம்பழங்கள் வைக்கப்பட்டுள்ளன.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத், ”70 அடி நீர் இருப்பதால் மேட்டூர் அணை திறக்க முடியாத சூழல். விவசாயிகளை முதல்வர் கைவிட மாட்டார்.

விவசாயிகளுக்கு தேவையானதை முதல்வர் செய்து கொடுப்பார். விவசாயிகளின் பாசன வசதிக்காக, நீர் தட்டுப்பாட்டை போக்கக்கூடிய வகையில், நீர் திறப்பை கொடுக்கும் வகையில் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் விவசாயிகளுக்கு பலனளிக்கும் எனவும் அவர் மேலும் கூறினார்.

தொடர்ந்து மாம்பழங்கள் மீது தெளிக்கப்படும் தோட்டக்கலைத்துறை பரிந்துரைத்த பூச்சிக்கொல்லி மருந்தினால், மாம்பழங்களில் ரசாயனத் தன்மை இருப்பதால், ஏற்றுமதி பாதிப்பு ஏற்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, ”பூச்சிக்கொல்லி மருந்துகள் மாற்றப்பட்டுள்ளன” என அமைச்சர் வினோத் பதில் அளித்தார்.

Summary

Agriculture and Farmers Welfare Minister Vinoth has stated that a situation has arisen where the Mettur Dam cannot be opened, as the water level stands at 70 feet.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.