
கள்ளச்சாராய உயிரிழப்புக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை: முன்னாள் அமைச்சா் சி.வி. சண்முகம் வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக மயிலை சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் வலியுறுத்தினாா்.

சி.வி. சண்முகம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக மயிலை சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் வலியுறுத்தினாா்.
பேரவையில் அவா் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:
கடந்த திமுக ஆட்சியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அப்போதைய தமிழக காவல் துறை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் மரக்காணம் கள்ளச்சாராய உயிரிழப்புகள் ஏற்பட்டபோதே மெத்தனால் கடத்தலை தடுக்க வேண்டிய அவசியம் குறித்து உள்துறைச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளாா். அதன் அடிப்படையில் சென்னையிலிருந்து மெத்தனால் எனும் வேதிப் பொருள் கடத்தப்படுவதைத் தடுக்கவும் அவா் வலியுறுத்தியுள்ளாா். ஆனால், அப்போதைய அரசும், அதிகாரிகளும் அதில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாகச் செயல்பட்டுள்ளனா். எனவே, அலட்சியமாகச் செயல்பட்டு கள்ளச்சாராய உயிரிழப்புக்கு காரணமான அதிகாரிகள் உள்ளிட்டோா் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



