பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

அமைச்சர் ஆனந்துடன் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அணி சந்திப்பு!

அமைச்சர் ஆனந்துடன் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்தித்தது பற்றி...

cv shanmugam

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் - கோப்புப்படம்

Published On :

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் என். ஆனந்த்துடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் நேரில் சந்தித்துப் பேசினர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி அணிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, இரு அணிகளாகப் பிரிந்தனர்.

பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், எடப்பாடி பழனிசாமியுடன் சமரசம் ஏற்பட்டதாக எஸ்.பி. வேலுமணி அணியினர் தெரிவித்தனர்.

ஆனால், சி.வி. சண்முகம் சமரசத்துக்கு வராத நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தங்களின் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

இதனிடையே, அதிமுகவில் பறிக்கப்பட்ட பதவிகள் மீண்டும் வழங்கப்படவில்லை என எஸ்.பி. வேலுமணி தரப்பினர் மீண்டும் இபிஎஸ்ஸுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். மேலும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் இணைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் முடிந்தவுடன், அமைச்சரும் தவெக பொதுச் செயலருமான என்.ஆனந்த் அறைக்குச் சென்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களுமான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகம் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

இதுவரை அதிமுகவின் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

S.P. Velumani and C.V. Shanmugam's faction meets Minister Anand!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.