என்ன, எல் நினோவால் தேநீர் விலை அதிகரிக்குமா? உண்மைதானா?திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?ஆதார் - மின்னஞ்சல் இணைப்புக்கு கட்டணம் இல்லை! அதனால் பயனென்ன?ஜூலை 1 முதல்.. பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் உயர்வு! மாணவர்கள் அதிர்ச்சிஅண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
/

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி மீண்டும் போர்க்கொடி!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி மீண்டும் போர்க்கொடி தூக்கியிருப்பது பற்றி...

News image

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி மீண்டும் போர்க்கொடி - Photo: X

Updated On :30 ஜூன் 2026, 3:11 pm IST

என்னை நம்பி வந்தவர்களை விட்டுவிட்டு நான் மட்டும் பதவியை ஏற்கத் தயாராக இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் பிரிந்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து அதிமுகவில் இபிஎஸ் அணி, எஸ்.பி. வேலுமணி அணி என இரண்டாகப் பிரிந்தது.

எஸ்.பி. வேலுமணி அணியில் சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பலர் இருந்தனர். இதன்பின்னர் பல்வேறு கட்ட அரசியல் நகர்வுகளுக்குப் பிறகு இரு அணிகளும் இணைந்தன.

இதையடுத்து, அதிமுகவில் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளுக்கு கடந்த வாரம் மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக துணைப் பொதுச் செயலர்களாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், எஸ்.பி. வேலுமணி ஆதரவாளர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்படாததால் அவர் அதிருப்தியில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் எஸ்.பி. வேலுமணி பேசிய விடியோ ஒன்று வைரலாகப் பரவி வருகின்றது.

அதில், “என்னை நம்பி வந்தவர்களை விட்டுவிட்டு நான் மட்டும் பதவியை ஏற்க தயாராக இல்லை. என்னுடன் வந்த 30 மாவட்டச் செயலாளர்களுக்கு பதவி கொடுக்கவில்லை. நான் மட்டும் எப்படி துணைப் பொதுச் செயலர் பதவியை ஏற்க முடியும்?” என்று அவர் பேசியுள்ளார்.

இதனிடையே, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை(ஜூலை 1) நடைபெறவுள்ள அதிமுக மகளிர் அணி கூட்டத்தை அவர் புறக்கணிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

S.P. Velumani raises the banner of revolt against Edappadi Palaniswami once again!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.