பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

தமிழகத்துக்கு காவிரி நீர்: கர்நாடகத்துக்கு ஆணையம் உத்தரவு

தமிழகத்துக்கு அடுத்த 15 நாள்களுக்கு விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செவ்வாய்க்கிழமை (செப்.8) உத்தரவிட்டது.

மேட்டூர் அணைக்கு வரும் காவிரி நீர்

Published On :9 செப்டம்பர் 2026, 4:22 am IST

தமிழகத்துக்கு அடுத்த 15 நாள்களுக்கு விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செவ்வாய்க்கிழமை (செப்.8) உத்தரவிட்டது.

தமிழகம் - கர்நாடகம் இடையே காவிரி நீர் பங்கீட்டு பிரச்னை நீடித்து வரும் நிலையில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தில்லியில் செவ்வாய்க்கிழமை கூடின.

முதலில் நடைபெற்ற ஒழுங்காற்றுக் குழு, தமிழகத்துக்கு நாளொன்றுக்கு விநாடிக்கு 6,000 கன அடி வீதம் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட பரிந்துரைத்தது.

இதைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 57 -ஆவது கூட்டம் பிற்பகல் 3 மணிக்கு ஆணையத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆணையம் 15 நாள் இடைவெளிக்குப் பிறகு நடத்தும் இரண்டாவது கூட்டம் இதுவாகும். இணையவழியிலும் நேரடி பங்கேற்பு மூலமும் இந்த கூட்டம் நடைபெற்றது.

கர்நாடக அரசுப் பிரதிநிதிகள் கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்ற நிலையில், தமிழக அரசின் பிரதிநிதிகள் இணையவழியில் பங்கேற்றனர். இரு தரப்பினரும் தங்களது தரப்பு புள்ளி விவரங்களை முன்னெடுத்து வைத்த நிலையில், இறுதியாக கர்நாடகம் தமிழகத்துக்கு விநாடிக்கு 6,000 கன அடி வீதம் அடுத்த 15 நாள்களுக்கு தண்ணீர் திறந்து விட ஆணையம் உத்தரவிட்டது.

முன்னதாக, கடந்த ஆக. 25-ஆம் தேதி நடைபெற்ற ஆணையத்தின் 56-ஆவது கூட்டத்தில் தமிழகத்துக்கு அடுத்த 15 நாள்களுக்கு காவிரியில் இருந்து விநாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.