
5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு! செப். 28-ல் இறுதி விசாரணை!
5 தொகுதி இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப் படம்
திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவிக்க விதிக்கப்பட்ட தடை, நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த இரண்டு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றதையடுத்து, திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை அவர் ராஜிநாமா செய்தார்.
மேலும், கரூர் எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலை எம்எல்ஏ சி. விஜயபாஸ்கர், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோரும் ராஜிநாமா செய்தனர்.
இதனிடையே, இவர்களின் தேர்தல் வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி, பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை அறிவிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிட விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி முதல்வா் விஜய் தரப்பிலும், தேர்தல் வழக்குகள் முடியும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை என தோ்தல் ஆணையம் தரப்பிலும் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில், இன்று(செப். 8) விசாரணைக்கு வந்தது.
திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்படுவதாகவும் வழக்கின் இறுதி விசாரணை செப். 28 ஆம் தேதி நடைபெறும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Summary
The Madras High Court has ordered the extension of the stay on the announcement of by-elections for five constituencies, including Trichy East.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






