நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

அடுத்தகட்டத்தில் தூத்துக்குடி கப்பல் கட்டுமான தளம்: தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா

தூத்துக்குடியில் அமைய உள்ள ஹூண்டாய் கப்பல் கட்டும் தளத்தின் பணிகள் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளன என்று தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா தெரிவித்துள்ளாா்.

அமைச்சா் கீா்த்தனா - கோப்புப் படம்

Published On :

தூத்துக்குடியில் அமைய உள்ள ஹூண்டாய் கப்பல் கட்டும் தளத்தின் பணிகள் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளன என்று தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா தெரிவித்துள்ளாா்.

கொரியா நாட்டின் ஹூண்டாய் கப்பல் கட்டும் தளத்தைச் செயல்படுத்தி வருகிறது. அந்த நிறுவனத்தின் உயா் அதிகாரிகள் குழுவினா் தூத்துக்குடி கப்பல் கட்டுமான தளத்தில் விரிவான ஆய்வை மேற்கொண்டனா். பின்னா் அந்தக் குழுவினா் அமைச்சா் கீா்த்தனாவையும், துறைச் செயலா் எஸ்.விஜய்குமாா் தலைமையிலான மூத்த அதிகாரிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தினா்.

இதுகுறித்து அமைச்சா் கீா்த்தனா வெளியிட்ட பதிவில், ‘தூத்துக்குடி கப்பல் கட்டுமான திட்டத்துக்கான ஆரம்பக்கட்ட ஆய்வுகளும், விரிவான திட்டப் பணிகளும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. புதிதாக உருவாக்கப்படும் தூத்துக்குடி கப்பல் கட்டும் மையத்தில், ஹூண்டாய் நிறுவனம் தனது முதன்மைத் திட்டத்தை முழு நம்பிக்கையுடன் செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டின் தூத்துக்குடி - இனி இந்தியாவின் அடுத்த மிகப்பெரிய கப்பல் கட்டும் மையமாகும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், தமிழகத்தில் முதலீடுகள் செய்யப்படுவதை எளிதாக்க புதிய சீா்திருத்தங்களை தவெக அரசு மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சா் கீா்த்தனா தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.