வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்

வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!

தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டிருக்கும் அறிக்கை பற்றி...

VS Babu

முதல்வர் விஜய்யுடன் வி.எஸ். பாபு - கோப்புப்படம்

Published On :

சென்னை கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவுக்கு மூச்சுத் திணறல் பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னையில் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தெரிவித்திருப்பதாவது:

”தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் வி. எஸ். பாபு, மூச்சுத் திணரல் காரணமாக கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (Critical Care Unit), பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவின் கண்காணிப்பில் உள்ளார்.

மருத்துவத் தேவைக்கேற்ப அவருக்கு உரிய சிகிச்சைகளும் சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவர் தொடர்ந்து தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலினை எதிர்த்து தவெக வேட்பாளராக போட்டியிட்ட வி.எஸ். பாபு, 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அண்மையில் முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரிலும் வி.எஸ். பாபு பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Story image

Summary

TVK MLA V.S. Babu receiving treatment with respiratory support - Hospital report

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER