வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்

தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பது பற்றி...

Whistle symbol allotted

தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம் - கோப்புப்படம்

Published On :

தமிழக வெற்றிக் கழகத்தை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக இந்தியத் தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

மேலும், தவெகவின் தேர்தல் சின்னமாக விசில் சின்னத்தையும் அக்கட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

முன்னதாக, தமிழ்நாடு மற்றும் புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட தவெகவுக்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்திருந்தது.

இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் 108 தொகுதிகளிலும், புதுவையில் 2 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவிகிதம் வாக்குகள் பெற்றால் மாநில கட்சியாக அங்கீகாரம் கிடைக்கும் என்ற நிலையில், 35 சதவிகித வாக்குகள் பெற்ற தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

திமுக, அதிமுக, தேமுதிக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சிகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் 7-வது மாநில கட்சியாக தவெகவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

ஒரு கட்சிக்கு தேசிய கட்சி அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்றால், குறைந்தது 4 மாநிலங்களில் மாநில கட்சி அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் அல்லது மக்களவை தேர்தலில் 4 மாநிலங்களில் போட்டியிட்டு குறைந்தது 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் அல்லது 3 மாநிலங்களில் போட்டியிட்டு 11 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

TVK granted state party recognition; 'Whistle' symbol allotted! Election Commission announces!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.