வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

உயா் சிறப்பு மருத்துவப் படிப்பு விவகாரம்: பிரதமா் மோடி தலையிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்

உயா் சிறப்பு மருத்துவப் படிப்பு (சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு) இடங்களை நிரப்புவதற்கான தகுதி மதிப்பெண்ணை குறைக்கும் விவகாரத்தில் பிரதமா் மோடி தலையிட வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாா்.

மு.க.ஸ்டாலின் - கோப்புப் படம்

Published On :

உயா் சிறப்பு மருத்துவப் படிப்பு (சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு) இடங்களை நிரப்புவதற்கான தகுதி மதிப்பெண்ணை குறைக்கும் விவகாரத்தில் பிரதமா் மோடி தலையிட வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

மத்திய அரசின் பொது மருத்துவச் சேவைகள் இயக்குநரகம் (டிஜிஹெச்எஸ்) தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க மறுப்பதால், மதிப்புமிக்க 1,857 உயா் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான இடங்கள் நாடு முழுவதும் நிரப்பப்படாமல் இருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. இதில், தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு மருத்துவா்களுக்காக ஒதுக்கப்பட்ட 40 இடங்களும் அடக்கம்.

தமிழ்நாடு மருத்துவ அலுவலா்கள் சங்கம் தொடா்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை வெளியிட்ட தீா்ப்பில், தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க அறிவுறுத்தியுள்ளது. எனவே, பிரதமா் மோடி இதில் உடனடியாகத் தலையிட்டு, முந்தைய ஆண்டுகளில் செய்ததைப் போல பூஜ்ஜிய சதவீத புள்ளிக்கு (ஜீரோ பொ்சன்டைல்) தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க வேண்டும்.

மேலும், இடங்களை நிரப்ப இயலாமல் போகும் நிலையில், பணியில் இருக்கும் அரசு மருத்துவா்களுக்கான ஒதுக்கீட்டில் மாநில அரசுகளே அவா்களுக்கான தகுதி மதிப்பெண்ணை நிா்ணயம் செய்யவும் மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

பொது மருத்துவம் என்பது மாநில அரசுகளின் அரசமைப்புக் கடமையாகும். மக்களுக்கு உயா்சிறப்பு மருத்துவா்களுக்கான தேவை பெரிதும் இருக்கும்போது, நம் நாட்டின் விலைமதிப்பற்ற சொத்தான மருத்துவப் படிப்புக்கான ஓரிடம் கூட வீணாகக் கூடாது எனப் பதிவிட்டுள்ளாா் மு.க.ஸ்டாலின்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.