விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

சிதம்பரம் கூத்தாடும் பிள்ளையார் கோயில் தேரோட்டம்!

சிதம்பரம் கூத்தாடும் பிள்ளையார் கோயில் தேரோட்டம் குறித்து...

Chariot procession of the Koothadum Pillaiyar Temple in Chidambaram.

சிதம்பரம் கூத்தாடும் பிள்ளையார் கோயில் தேரோட்டம். - படம் - தினமணி

Published On :

சிதம்பரம் பெரியார் தெருவில் அமைந்துள்ள நர்த்தன விநாயகர் என அழைக்கப்படும் கூத்தாடும் பிள்ளையார் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (செப். 13) நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் பத்து நாள் உற்சவம் செப். 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் இரவு, பிள்ளையார் எட்டுவிதமான வாகனங்களில் வீதியுலா வந்தார்.

ஒன்பதாம் நாள் விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்வாக தேர்த்திருவிழா நடைபெற்றது. காலை 9 மணியளவில் ஏராளமான பக்தர்கள் "ஆனை முகன், கணேசா, விநாயகா" என்ற கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் அனந்தீஸ்வரன் கோயில் அக்ரகாரம், அனந்தீஸ்வரன் கோயில் தெரு, சின்னக் கடைத்தெரு, பெரியார் தெரு வழியாக மீண்டும் தேர் நிலையை வந்தடைந்தது.

10 ஆம் நாள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை, விநாயகர் வீதி உலா நடைபெறும். 11ஆம் நாள் பல்லக்கு உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை அந்த பகுதி பக்தர்கள் செய்திருந்தனர்.

தேர் செல்லும் பாதையில் உள்ள மின் கம்பிகளை அகற்றும் பணியில் சிதம்பரம் மின் வாரிய செயற்பொறியாளர் மேற்பார்வையில் மின் வாரிய பணியாளர்கள் மேற்கொண்டனர். சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் தேர் செல்லும் பாதையில் இருபுறமும் துப்புரவு பணி மேற்கொள்ளப் பட்டது.

Summary

The chariot procession of the Koothadum Pillaiyar Temple also known as Narthana Vinayagar located on Periyar Street in Chidambaram took place on Sunday (Sept. 13).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.