விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

தொழில் துறை அமைச்சரின்றி முதல்வர் விஜய் லண்டன் பயணம்: நயினார் நாகேந்திரன் கேள்வி!

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் குறித்து நயினார் நாகேந்திரன் கேள்வி.

Chief Minister Vijay, Nainar Nagendran

முதல்வர் விஜய், நயினார் நாகேந்திரன் - தினமணி

Published On :

தமிழக முதல்வர் விஜய், தொழில் துறை அமைச்சர் இல்லாமலேயே முதலீடுகளை ஈர்க்க சென்றுள்ளாரா என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நெல்லை சந்திப்பு உடையார் பட்டியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் அந்தக் கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், ”சட்டப்பேரவை தற்போது முடிந்துள்ளது, சட்டப்பேரவை எப்படியெல்லாம் நடந்தது என்பதை பொதுமக்கள் பார்த்துள்ளார்கள், வேடிக்கையாகவும் சிலர் பார்க்கிறார்கள், விந்தையாகவும் பார்க்கிறார்கள்.

தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வரயிருக்கிறது. சட்டப்பேரவை பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மூன்று மாதத்திற்குள் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வருகிறது என்றால், குதிரை பேரம் நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்

நம்முடைய முதல்வர் விஜய் லண்டன் சென்றுள்ளார். உடன் யாரெல்லாம் சென்றுள்ளார்கள்? முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ளாரா? அல்லது இல்லையா? இந்த மூன்று நாள்களில் எத்தனைப் பேரைச் சந்திக்க முடியும்.

சொந்த வேலையாக சென்று இருந்தால், நான் எதுவும் சொல்ல முடியாது, முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ளார் என்றால், யாரெல்லாம் சந்தித்துள்ளார், எத்தனை கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது, தொழில் துறை அமைச்சர்கள் இல்லாமல், தற்போது லண்டனுக்கு சென்றுள்ள முதல்வர், யாரை சென்று பார்க்கிறாரோ, என்ன செய்யப் போகிறாரோ என்பதை அவர் வந்த பிறகு தான் தெரியும்.

நான் தொழில் துறை அமைச்சராக இருந்தபோது தமிழகத்திற்கு பல்வேறு தொழிற்சாலைகளை கொண்டு வந்துள்ளேன்” என்றார்.

Summary

Nainar Nagendran has questioned whether Tamil Nadu Chief Minister Vijay has gone to attract investments without the Industries Minister.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.