முதல்வர் விஜய் குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதற்கு 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக இளைஞர்களுக்கும், வளரும் நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியது இத்தகைய மூன்றாந்தர அரசியல் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் அநாகரிகமாகப் பேசிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இந்நிலையில் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில்,
"தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுகவின் உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதல்வர் விஜய்யின் தாய் குறித்துக் கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.
அரசியலில் இருப்பவர்கள் தங்கள் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கைகளை விமர்சிக்கலாம். ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம். ஆனால், ஒருவரின் குடும்பத்தினரை, குறிப்பாக அவர்களின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த வகையிலான தரக்குறைவான கருத்துக்கள், முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே காலாவதியாகிப் போன அரசியல்.
இன்றைய தமிழக இளைஞர்களுக்கும், வளரும் நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியது இத்தகைய மூன்றாந்தர அரசியல் அல்ல" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழà¯à®¨à®¾à®à¯à®à®¿à®©à¯ à®à®°à®à®¿à®¯à®²à¯ à®à®³à®¤à¯à®¤à¯ à®à®¨à®¾à®à®°à®¿à®à®®à®¾à®à¯à®à¯à®®à¯ பà¯à®à¯à®à¯à®à®³à¯ தà¯à®à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®°à®à¯à®à¯à®±à¯à®µà®¤à¯ மிà®à®µà¯à®®à¯ à®à®£à¯à®à®¿à®à¯à®à®¤à¯à®¤à®à¯à®à®¤à¯. திமà¯à®à®µà®¿à®©à¯ திரà¯. à®à®¤à®¯à®¨à®¿à®¤à®¿ ஸà¯à®à®¾à®²à®¿à®©à¯à®¤à¯ தà¯à®à®°à¯à®¨à¯à®¤à¯, தறà¯à®ªà¯à®¤à¯ தமிழ஠பாà®à® மாநிலத௠தலà¯à®µà®°à¯ திரà¯. நயினார௠நாà®à¯à®¨à¯à®¤à®¿à®°à®©à¯ à®à®µà®°à¯à®à®³à¯à®®à¯, à®à®°à®à®¿à®¯à®²à¯ நாà®à®°à®¿à®à®¤à¯à®¤à®¿à®©à¯ à®à®²à¯à®²à¯à®à®³à¯ à®®à¯à®±à®¿, தமிழ஠மà¯à®¤à®²à®®à¯à®à¯à®à®°à¯ திரà¯.â¦
— K.Annamalai (@annamalai_k) August 15, 2026
Summary
Annamalai condemns BJP leader Nainar Nagendran remarks regarding Chief Minister Vijay
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முதல்வர் விஜய் குறித்து நயினார் சர்ச்சை பேச்சு: காங்கிரஸ் கண்டனம்

முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!

பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் சர்ச்சை பேச்சு!
தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ்: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்





