என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்குத் தயக்கமில்லை: ஆ. ராசா பதிவு!
என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்குத் தயக்கமில்லை என ஆ. ராசா தெரிவித்திருப்பது குறித்து...

திமுக எம்.பி. ஆ. ராசா - file photo
என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்குத் தயக்கமில்லை என மக்களவை உறுப்பினர் ஆ. ராசா ஞாயிற்றுக்கிழமை (செப். 13) தெரிவித்துள்ளார்.
மேலும், நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவமதிக்கும் வகையில் பேசியதாக முதல்வர் ஜோசப் விஜய்யைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் ஆ. ராசா, அமைச்சர் நிர்மல் குமார் குறித்து பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் பேச்சுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக ஆ. ராசா தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் ‘அடையாளத்தை’ - உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’ ‘உண்மையை’ உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான்.
என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்குத்தயக்கமில்லை. நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தியாà®à®¤à¯à®¤à®¿à®²à¯ விளà¯à®¨à¯à®¤ à®à®°à¯ தலà¯à®µà®©à®¿à®©à¯
— A RAJA (@dmk_raja) September 13, 2026
âà®à®à¯à®¯à®¾à®³à®¤à¯à®¤à¯â - à®à®£à¯à®®à¯âய௠வà¯à®£à¯à®à¯à®®à¯à®©à¯à®±à¯ திà®à¯à®à®®à®¿à®à¯à®à¯ à®à®³à¯à®¨à¯à®à¯à®à®¤à¯à®¤à¯à®à¯ à®®à¯à®£à¯à®à¯à®®à¯ à®®à¯à®£à¯à®à¯à®®à¯ âபà¯à®¯à¯â à®à®©à¯à®±à¯ à®à¯à®à¯à®à¯à®ªà¯à®ªà®à¯à®¤à¯à®¤à®¿ âà®à®³à®©à®®à¯â à®à¯à®¯à¯à®¤à®¤à®¾à®²à¯ à®à®±à¯à®ªà®à¯à® âவலியà¯â à®à®£à®°à¯à®¤à¯à®¤ à®à®³à®©à®®à¯ à®à¯à®¯à¯à®¤à®µà®°à®¿à®©à¯ âà®à®à¯à®¯à®¾à®³à®¤à¯à®¤à¯â âà®à®£à¯à®®à¯à®¯à¯â à®à®£à®°à¯à®à¯à®à®¿ à®à®¨à¯à®¤à¯à®¤à®²à®¿à®²à¯
à®à¯à®³à¯à®µà®¿à®à¯à®à¯à®³à¯à®³à®¾à®à¯à®à®¿à®¯à®¤à®¿à®²à¯â¦
Summary
Lok Sabha member A. Raja stated on Sunday (Sept. 13) that he has no hesitation in withdrawing his words.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






