தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

ஹெச்.ராஜாவுக்கு சிறைத் தண்டனை விதித்து பிறப்பித்த உத்தரவு ரத்து

ஹெச். ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை ரத்து செய்யப்பட்டது பற்றி...

h raja

எச். ராஜா - கோப்புப்படம்

Published On :

பெரியாா் ஈவெரா, திமுக எம்.பி. கனிமொழி ஆகியோருக்கு எதிராக அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தமிழக பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜாவுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த 6 மாத சிறைத் தண்டனையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2018-ஆம் ஆண்டு பெரியாா் சிலையை உடைப்பேன் என்று கூறியதாகவும், திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக அவதூறு கருத்துகளையும் எக்ஸ் தளத்தில் பதிவு செய்தாகவும் பல்வேறு காவல் நிலையங்களில் பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா திமுக நிா்வாகிகள், தந்தை பெரியாா் திராவிடா் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் புகாா்கள் அளிக்கப்பட்டன.

திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக கருத்து தெரிவித்த புகாரில் ஈரோடு நகர காவல் நிலையத்திலும், பெரியாா் சிலை உடைப்பு பேச்சு தொடா்பாக ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்திலும் ஹெச்.ராஜாவுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஹெச்.ராஜா தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, இந்த வழக்குகளை விசாரித்த சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், இந்த இரு வழக்குகளிலும் தனித்தனியாக 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது. சிறப்பு நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு எதிராக ஹெச்.ராஜா சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கில் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் செவ்வாய்க்கிழமை பிறப்பித்த தீா்ப்பில், ஹெச்.ராஜாவின் பதிவுகளால் சமூகத்தில் பதற்றம் ஏற்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறி, இரு வழக்குகளிலும் தண்டனை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளாா்.

Summary

Jail sentence imposed on H. Raja set aside!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.