
விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு
நாகர்கோவில் - தாம்பரம் இடையே நாளை (செப். 14) சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டது குறித்து...
நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு - பிரதிப் படம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாகர்கோவில் - தாம்பரம் இடையே நாளை (செப். 14) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை (செப். 14) விநாயகர் சதுர்த்தி விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ள நிலையில், 1 லட்சம் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படவுள்ளது.
மேலும், திங்கள்கிழமையில் விநாயகர் சதுர்த்தி வருவதால், தொடர் விடுமுறையாகக் கொண்டு மக்கள், ரயில்கள், பேருந்துகளில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.
இதனிடையே, விநாயகர் சதுர்த்தி விழா நிறைவடைந்தவுடன் மீண்டும் அவர்களின் பணியிடத்துக்குத் திரும்புவதற்கு ஏதுவாக சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாகர்கோவில் - தாம்பரம் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி, நாகர்கோவிலில் இருந்து செப். 14 இரவு 11 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு, மறுநாள் (செப். 15) காலை 10.45 மணிக்கு சென்னை தாம்பரம் வந்தடையும். இதற்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.
Summary
Vinayagar Chaturthi: A special train will be operated between Nagercoil and Tambaram tomorrow (Sep. 14)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






