16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

வாக்களிக்கும் விநாயகர்! தேர்தலை நடத்தும் விநாயகர்கள்!

வாக்கு செலுத்துவதின் அவசியம் குறித்து வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை.

vinayagar

வாக்களிக்கும் விநாயகர்! தேர்தலை நடத்தும் விநாயகர்கள்! - படம்: தினமணி

Published On :

வேலூர் தொரப்பாடி பாலாஜி நகரில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வாக்கு செலுத்துவதின் அவசியம் குறித்து, வித்தியாசமான முறையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை, பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அரசுப் பள்ளி வடிவில் வடிவமைக்கப்பட்டு நுழைவு வாயிலில், வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களின் அர்ப்பணிப்பைப் போற்றும் வகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ​

அதன் உள்ளே மின்னணு வாக்குச்சாவடி மையம் அமைத்து, அதில் விநாயகர் வாக்களிப்பது போன்றும், தேர்தலை விநாயகர்களே நடத்துவது போன்றும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலில் பாலாஜி நகர் இளைஞர்கள் போட்டியிடுவது போன்று வடிவமைத்து, பொதுமக்கள் வாக்கு செலுத்துவதின் அவசியம் குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

அனந்தசயன கோலத்தில் சயனித்திருக்கும் பிரம்மாண்ட விநாயகர்

அனந்தசயன கோலத்தில் சயனித்திருக்கும் பிரம்மாண்ட விநாயகர் - படம்: தினமணி

இதனைக் காண வந்த பக்தர்கள், வாக்களிக்கும் விநாயகர் உடன் சுயப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

மேலும், கருவறையில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி போன்று அனந்தசயன கோலத்தில் சயனித்திருக்கும் பிரம்மாண்ட விநாயகர் திருவுருவமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது இருக்கிறது.

Summary

In Balaji Nagar, Thorapadi, Vellore, a Vinayagar idol installed in a unique manner to highlight the importance of voting ahead of the Vinayagar Chaturthi festival has greatly captivated devotees.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.