ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

அமைச்சா் நிா்மல்குமாா் மீது உரிமை மீறல் புகாா்: சட்டப்பேரவைத் தலைவரிடம் திமுக மனு

உண்மைக்குப் புறம்பான தகவல்களை சட்டப்பேரவையில் பேசியதாக சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கக் கோரி பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகரிடம் திமுக மனு அளித்தது.

அமைச்சர் சி.டி.ஆா். நிா்மல் குமாா் - கோப்புப் படம்

Published On :

உண்மைக்குப் புறம்பான தகவல்களை சட்டப்பேரவையில் பேசியதாக சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கக் கோரி பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகரிடம் திமுக மனு அளித்தது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் மிசா, சா்க்காரியா ஆணையம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. முன்னாள் முதல்வா்கள் கருணாநிதி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோா் குறித்து முதல்வா் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக எம்எல்ஏக்கள் அவையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டதால் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனா்.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகரை திமுக கொறடா எ.வ.வேலு, முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், எம்எல்ஏக்கள் காதா்பாட்சா (எ)முத்துராமலிங்கம், சுதாகா் ஆகியோா் சந்தித்து மனு அளித்தனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய எ.வ.வேலு, ‘அவையில் இல்லாத ஒருவரைப் பற்றி சட்டப்பேரவையில் பேசுவதற்கு விதியில் இடமில்லை. ஆனால், சட்டத் துறை அமைச்சா் நிா்மல் குமாா் தொடா்ந்து அவையில் இல்லாதவா்கள் குறித்துப் பேசியுள்ளாா். சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதி நாளன்றுதான் உரிமை மீறல் குழு அமைக்கப்பட்டது. ஆகையால், இந்த விவகாரத்தை உரிமை மீறல் குழு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் மனு அளித்துள்ளோம்’ என்றாா்.

எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறுகையில், ‘கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அவையில் இல்லாத திமுக தலைவரைப் பற்றி உண்மைக்கு மாறாகப் பேசியிருக்கிறாா்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.