
வேங்கைவயல் விவகாரத்தில் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்! வன்னி அரசு
மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் திமுகதான் அரசியல் செய்கிறது என்று சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு பேட்டி...
வன்னி அரசு - fb / vanni arasu
மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது என்று சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"மாணவர் பாரதிதாசன் கோரிய முழு உதவித்தொகையும் விடுக்கப்பட்டுள்ளது. முந்தைய திமுக அரசில் எப்படி விளக்கம் கேட்பார்களோ அதுபோலவே நாங்களும் மாணவரிடம் விளக்கம் கேட்டோம்.
மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. திமுகதான் அரசியல் செய்கிறது.
உண்மையில் திமுகவுக்கு தலித் மாணவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால், அம்பேத்கர் அயலக கல்வி உதவித் திட்டத்தில் 601 பேர் தகுதி பெற்றிருந்த நிலையில், 153 பேருக்குதான் கொடுத்திருக்கிறார்கள். மீதியுள்ள மாணவர்களுக்கு துரோகம் இழைத்திருக்கிறார்கள்.
வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மீது வழக்கு போட்டது திமுகதான். அதில் பாதிக்கப்பட்ட ஒரு காவலர் என்னிடம் வந்து புகார் தெரிவித்தார். எங்களுடைய தலைவர் திருமாவளவன், அப்போதைய முதல்வர் ஸ்டாலினிடம் சென்று இதுபற்றி கேள்வி எழுப்பினார். தலித் மாணவர்கள், இளைஞர்களுக்கு மிக மோசமாக வஞ்சகம் செய்த அரசு திமுக அரசு. வேங்கைவயல் விவகாரத்தில் திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.
மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் திமுக நடந்துகொள்வது ஒரு நாடகம் போலவே தோன்றுகிறது. எங்களுக்கு கூடுதல் அக்கறை இருக்கிறது, அந்த பொறுப்புடன் செயல்படுகிறோம். மாணவர் பாரதிதாசனின் பாதுகாப்பு, படிப்புக்கு நாங்கள் உறுதி அளிக்கிறோம்" என்று கூறினார்.
Summary
DMK must apologize for the Vengaivayal incident: Vanni Arasu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








