இரட்டைக் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தற்காலிக அரசுப் பணி ஆணை!வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!ஃபென்ஜால் புயலுக்குப் பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதி கனமழை பதிவு!ஒரே நாளில் 8 கொலைகள்; தவெக அரசுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய பிரேமலதா!சிப்காட், என்.எல்.சி சுரங்கத்துக்கு கூடுதல் நிலம் கையகப்படுத்தல்: அன்புமணி கண்டனம்!ஆசிய விளையாட்டு: வெள்ளி வென்றார் இளவேனில்!

புயல் சின்னம்: சென்னையில் செப். 21,22-ல் கனமழைக்கு வாய்ப்பு!

புயல் சின்னம் காரணமாக சென்னையில் கனமழை பெய்யவுள்ளது குறித்து...

rain

புயல் சின்னம்: சென்னையில் செப். 21,21-ல் கனமழைக்கு வாய்ப்பு! - கோப்புப்படம்

Published On :

வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னயில் நாளை(செப். 21) மற்றும் நாளை மறுநாள் (செப். 22) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, டெல்டா வெதர்மேன் என்று அறியப்படும், தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்திருப்பதாவது:

”நேற்று(செப். 19) கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக இடி, மின்னலுடன் கூடிய மழை பதிவானது.

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் சாதகமான காற்று குவிதலால் தமிழ்நாட்டில் செப். 22 ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை நீடிக்கும்.

இந்த சுற்றின் இரண்டாவது நாளான இன்று (செப். 20) மாலை/இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்.

குறிப்பாக கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் மற்றும் புதுவை, காரைக்கால் உள்பட 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஒருசில இடங்களில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை வாய்ப்பு. செப். 21 மற்றும் செப். 22-ல் இடியுடன் கூடிய கனமழை எதிர்ப்பர்க்கலாம்.

மேற்குறிப்பிடாத மேற்கு மற்றும் கொங்கு மாவட்டங்களில் ஆங்காங்கே மாலை/இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Summary

Private weather forecaster Hemachandran has stated that heavy rain is likely in Chennai tomorrow (Sept. 21) and the day after (Sept. 22) due to a low-pressure area that has formed over the North Andaman Sea.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER