மதுரையில் ஒரே நாளில் பெண் உள்பட மூவா் வெட்டிக் கொலைஇன்று விநாயகா் சிலை ஊா்வலம்: சென்னையில் 23,000 போலீஸாா் பாதுகாப்புபட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்துக்கு தடை கோரி வழக்கு!மானிய வீட்டு உபயோக சிலிண்டருக்கு அக்.1 முதல் பயோமெட்ரிக் ஆதாா் சரிபாா்ப்பு கட்டாயம்! ‘சூப்பா் எல் நினோவால்’ இந்தியாவுக்கு கடும் பாதிப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கைஒரே இடத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றினால் இடமாற்றம்: தமிழக அரசு நடவடிக்கை

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சீருடை! நவ. 15 முதல் அமல்!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு புதிய சீருடை அறிமுகப்படுத்தப்படவுள்ளது குறித்து...

Uniform

மாதிரி சீருடை - படம்: தமிழக அரசு

Published On :

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தில் சில்லரை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு புதிய சீருடைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் வரும் நவ. 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுவிலக்கு ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின்போது டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவியாளர்களுக்கு ஆண்டுதோறும் 3 சீருடைகள் மற்றும் துணி மற்றும் தையல் செலவுகளுக்காக ரூ.6,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு சீருடை அணிதல் திட்டம் நவம்பர் 15 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

3 சீருடைகளுக்கு தலா ரூ. 2,000 வீதம் ரூ. 6,000 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். மேற்பார்வையாளர்கள் நீல நிற சட்டையும் அடர் நீல நிற பேண்ட் அணிவார்கள்.

விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் வெளிர் பழுப்பு நிற சட்டையும், அடர் சாம்பல் நிறக் பேண்ட் அணிவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீருடையின் இடது பக்க நெஞ்சில் TASMAC நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இலச்சினை இடம்பெறும் வகையில் சீருடை அமைக்கப்பட்டுள்ளது.

Summary

A new uniform scheme has been introduced for supervisors, salespeople, and assistant salespeople working at TASMAC retail outlets in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER