இரட்டைக் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தற்காலிக அரசுப் பணி ஆணை!வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!ஃபென்ஜால் புயலுக்குப் பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதி கனமழை பதிவு!ஒரே நாளில் 8 கொலைகள்; தவெக அரசுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய பிரேமலதா!சிப்காட், என்.எல்.சி சுரங்கத்துக்கு கூடுதல் நிலம் கையகப்படுத்தல்: அன்புமணி கண்டனம்!ஆசிய விளையாட்டு: வெள்ளி வென்றார் இளவேனில்!

கல்லணையில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு- சுற்றுலா பயணிகள் உற்சாகம்

பழமையான கல்லணையில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருவது பற்றி...

Water Gushes at Kallanai Dam; Tourists Thrilled!

கல்லணை

Published On :

பழமையான கல்லணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்லும் நிலையில் அதனைக் காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ள சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கரிகால சோழ மன்னரால் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க கல்லணை, இன்றளவும் கம்பீரமாக காட்சியளித்து வருகிறது.

தமிழக அரசால் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணை, டெல்டா மாவட்ட பாசன விவசாயிகளுக்கு நீரை பகிர்ந்தளிக்கும் முக்கிய பங்கை வகித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீரின்றி வறண்டு காணப்பட்ட கல்லணை, மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் வந்து சேர்ந்ததால் தற்போது நிரம்பி வழிகிறது.

அணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் மற்றும் கல்லணை கால்வாய் ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

இதனைக் காண தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். குடும்பம் குடும்பமாக வந்து காவிரி ஆற்றில் குளித்தும், அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் அழகை ரசித்தும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

Summary

As water gushes through the ancient Kallanai Dam, tourists are gathering in large numbers to witness the sight.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.