FOLLOW US

ON GOOGLE DISCOVER

பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

kallanai dam

கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு! - படம்: தினமணி

Published On :6 செப்டம்பர் 2026, 12:01 pm IST

டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நெல்மணிகளையும் மலர்களையும் தூவி வேளாண் துறை அமைச்சர் வினோத் மற்றும் அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் திறந்து வைத்தனர்.

மேட்டூர் அணையில் நிகழாண்டு போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்பு இல்லாததால், உரிய காலத்தில் திறக்கப்படாமல் தள்ளிப் போனது.

இதனிடையே, அணையில் கடந்த வாரம் 90 அடியை எட்டியதைத் தொடர்ந்து, டெல்டா பாசனத்துக்காக அணையைத் முதல்வர் விஜய் செப். 1-ஆம் தேதி திறந்து வைத்தார்.

அணையிலிருந்து விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்படும் தண்ணீர், கரூர் மாவட்டம் மாயனூருக்கு வியாழக்கிழமையும், திருச்சி மாவட்டம் முக்கொம்புக்கு வெள்ளிக்கிழமையும் வந்தடைந்தது.

இதைத்தொடா்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு தண்ணீர் சனிக்கிழமை வந்தது. மொத்தம் 10 அடி உயரம் கொண்ட கல்லணையில் சனிக்கிழமை மாலை நிலவரப்படி நான்கரை அடியை எட்டியது. குடிநீருக்காக கொள்ளிடத்தில் விநாடிக்கு 480 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

இந்த நிலையில், டெல்டா பாசனத்துக்காக கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

காவிரியில் 1000 கன அடி, வெண்ணாற்றில் 1000 கன அடி, கல்லணைக் கால்வாயில் 500 கன அடி, கொள்ளிடம் ஆற்றில் 500 கன அடி வீதம் திறக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் 67,300 ஹெக்டேர், திருவாரூர் மாவட்டத்தில் 81,100 ஹெக்டேர், நாகையில் 64,520 ஹெக்டேர், மயிலாடுதுறையில் 68,900 ஹெக்டேர், கடலூர் மாவட்டத்தில் 30,978 ஹெக்டேர் என 3 லட்சத்து 12 ஆயிரத்து 788 ஹெக்டேர் விளைநிலங்கள் பாசன வசதி பெற உள்ளது.

Summary

Water has been released from Kallanai for Delta irrigation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.