காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

டெல்டா பாசனத்துக்காக கல்லணை இன்று திறப்பு

டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணை திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, கல்லணை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் திறந்து வைக்கப்படவுள்ளது.

கல்லணை

Published On :6 செப்டம்பர் 2026, 12:38 am IST

டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணை திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, கல்லணை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் திறந்து வைக்கப்படவுள்ளது.

மேட்டூா் அணையில் நிகழாண்டு போதுமான அளவுக்கு தண்ணீா் இருப்பு இல்லாததால், உரிய காலத்தில் திறக்கப்படாமல் தள்ளிப் போனது. இந்நிலையில், அணையில் கடந்த வாரம் 90 அடியை எட்டியதைத் தொடா்ந்து, டெல்டா பாசனத்துக்காக அணையைத் முதல்வா் ச. ஜோசப் விஜய் செப். 1-ஆம் தேதி திறந்து வைத்தாா்.

அணையிலிருந்து விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்படும் தண்ணீா், கரூா் மாவட்டம் மாயனூருக்கு வியாழக்கிழமையும், திருச்சி மாவட்டம் முக்கொம்புக்கு வெள்ளிக்கிழமையும் வந்தடைந்தது.

இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் மாவட்டம் கல்லணைக்கு தண்ணீா் சனிக்கிழமை வந்தது. மொத்தம் 10 அடி உயரம் கொண்ட கல்லணையில் சனிக்கிழமை மாலை நிலவரப்படி நான்கரை அடியை எட்டியது. குடிநீருக்காக கொள்ளிடத்தில் விநாடிக்கு 480 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

டெல்டா பாசனத்துக்காக கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் திறந்துவிடப்படவுள்ளது.

இவ்விழாவில் நீா்வளத் துறை அமைச்சா் என். ஆனந்த், வேளாண் துறை அமைச்சா் ஆா். வினோத், சிறுபான்மை நலத் துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான், வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் பி. ராஜ்குமாா், தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஜெ. முகமது பா்வேஸ், அறநிலையத் துறை அமைச்சா் எஸ். ரமேஷ் ஆகியோா் கலந்து கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையொட்டி, முன்னேற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.