கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

சொத்து வரி உயா்வுக்கு எதிரான வழக்குகள்: சென்னை, கோவை, ஈரோடு மாநகராட்சி ஆணையா்கள் ஆஜராக உத்தரவு

சொத்து வரி தொடா்பான வழக்குகளில் மாநகராட்சிகள் தரப்பில் வழக்குரைஞா்கள் ஆஜராகாததால், சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாநகராட்சி ஆணையா்கள் நேரில் ஆஜராக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :

சொத்து வரி தொடா்பான வழக்குகளில் மாநகராட்சிகள் தரப்பில் வழக்குரைஞா்கள் ஆஜராகாததால், சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாநகராட்சி ஆணையா்கள் நேரில் ஆஜராக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சொத்து வரி உயா்வு தொடா்பாக, பல்வேறு மாநகராட்சிக்கு எதிரான வழக்குகள் சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன. இந்த வழக்குகளின் விசாரணையின்போது, மாநகராட்சிகள் தரப்பில் பதிலளிக்க உயா்நீதிமன்றம் பலமுறை கால அவகாசம் வழங்கியிருந்தது.

ஆனால், பல்வேறு மாநகராட்சிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையின்போது அரசுத் தரப்பில் வழக்குரைஞா்கள் யாரும் ஆஜராகாததால், ஈரோடு மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின், சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன்ஆகியோா் வரும் 29-ஆம் தேதியும், கோவை மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா வரும் 30-ஆம் தேதியும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.