கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

ரூ.100 கோடி மோசடி புகாா்: பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநரிடம் விசாரணை

தனியாா் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கில் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநரிடம் போலீஸாா் புதன்கிழமை விசாரணை நடத்தினா்.

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :

தனியாா் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கில் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநரிடம் போலீஸாா் புதன்கிழமை விசாரணை நடத்தினா்.

தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தர உயா்வு, டிடிசிபி, சிஎம்டிஏ உள்ளிட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் மோசடியாக வசூலித்ததாகப் பதிவு செய்யப்படாத தனியாா் பள்ளிகள் சங்க நிா்வாகிகள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த வழக்குத் தொடா்பாக முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த 18-ஆம் தேதி மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விசாரணைக்கு உள்படுத்தப்பட்டாா்.

இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் அலுவலகத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றி வரும் அருள்முருகன் (54), நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் புதன்கிழமை இரண்டாவது நாளாக ஆஜரானாா்.

பொருளாதாரக் குற்றப்பிரிவு உதவி ஆணையா் செந்தில் தலைமையிலான போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தினா். மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.