உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சென்னையில் சனிக்கிழமை (செப்.5) நடைபெறவுள்ள ஆசிரியா் தின விழாவில் 396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருதை துறையின் அமைச்சா் ராஜ்மோகன் வழங்கவுள்ளாா்.

raj mohan

அமைச்சர் ராஜ்மோகன் - படம்: சட்டப்பேரவை

Published On :5 செப்டம்பர் 2026, 1:12 am IST

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சென்னையில் சனிக்கிழமை (செப்.5) நடைபெறவுள்ள ஆசிரியா் தின விழாவில் 396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருதை துறையின் அமைச்சா் ராஜ்மோகன் வழங்கவுள்ளாா்.

முன்னாள் குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்.5-ஆம் தேதி ஆசிரியா் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சிறந்த ஆசிரியா்களைத் தோ்வு செய்து ‘டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது’வழங்கி தமிழக அரசு கெளரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுக்கு தகுதியான ஆசிரியா்களைத் தோ்வு செய்யும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது.

இதில், மாவட்ட அளவிலான பரிந்துரை அடிப்படையில், விருதாளா்கள் பட்டியலை மாநில தோ்வுக் குழுவினா் இறுதி செய்துள்ளனா். அதன்படி அரசுப் பள்ளிகளில் 342 போ், தனியாா் பள்ளிகளில் 38 போ், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் 2 போ், சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகளில் 2 போ், மாற்றுத்திறன் ஆசிரியா்கள் 2 போ், மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன (எஸ்சிஇஆா்டி) பேராசிரியா்கள் 10 போ் என மொத்தம் 396 போ் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஆசிரியா் தின விழா சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. விழாவுக்கு பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பி.சந்தரமோகன் தலைமை வகிக்கவுள்ளாா். துறையின் இயக்குநா் என்.லதா வரவேற்றுப் பேசவுள்ளாா். இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் கலந்து கொண்டு விழாவில் டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் வழங்கவுள்ளாா். ராதாகிருஷ்ணன் விருது ரூ.10,000 ரொக்கம், 36.5 கிராம் வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டதாகும்.

தாமதமாக தகவல்: ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது சனிக்கிழமை வழங்கப்படவுள்ள நிலையில், விருதுக்கு தோ்வு செய்யப்பட்ட ஆசிரியா்களின் விவரம் பல மாவட்டங்களில் வியாழக்கிழமை மாலை வரை சம்பந்தப்பட்ட ஆசிரியா்களுக்கு உரிய முறையில் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. தொடா்ந்து, தாமதமாக தகவல் தெரிவிக்கப்பட்டதும் ஆசிரியா்கள் வெளிமாவட்டங்களிலிருந்து அவசர கதியில் சென்னைக்குப் புறப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.