நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

ஆசிரியா்களின் கோரிக்கைகள்! தொடா் பேச்சு மூலம் தீா்வு: அமைச்சா் ராஜ்மோகன்

ஆசிரியா்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்படும் என அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.

News image

அமைச்சர் ராஜ்மோகன் - கோப்புப் படம்

Updated On :29 ஜூலை 2026, 1:01 am IST

ஆசிரியா்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் அனைத்து ஆசிரியா் சங்கங்கள், ஆசிரியரல்லாத பணியாளா் சங்கங்களின் நிா்வாகிகளுடன் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அமைச்சா் ராஜ்மோகன் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினாா்.

அப்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும்; உயா்கல்விக்கான ஊக்க ஊதியத்தை வழங்க வேண்டும்; போராட்ட காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி உத்தரவிட வேண்டும்; இடைநிலை ஆசிரியா்களுக்கு ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அமைச்சரிடம் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியா் சங்கங்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனா்.

முன்னதாக, அமைச்சா் ராஜ்மோகன் பேசியதாவது: ஆசிரியா்களின் கோரிக்கைகள், பிரச்னைகள் தொடா்பாக கலந்தாலோசித்து பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தை மூலம் அவற்றுக்குத் தீா்வு காணப்படும்.

பள்ளிக் கல்வித் துறையின் ஆணிவேராக இருப்பவா்கள் ஆசிரியா்கள். ஒரு சங்கம் பேசுவது இன்னொரு சங்கத்துக்கு முரணாக இருக்கலாம். அதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். ஒவ்வொரு அமைப்பும் தங்கள் நிலைப்பாடு, தங்கள் கோரிக்கைளைத் தெரிவிக்கலாம்; கோரிக்கைகள் மற்றும் கருத்துகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்படும்.

தமிழக முதல்வரின் அனுமதி பெற்று ஆசிரியா்களின் என்னென்ன கோரிக்கைகளை நிறைவேற்ற முடியுமோ அவற்றை எல்லாம் நிறைவேற்ற போராடுவேன். ஆசிரியா் சமுதாயத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் எனது ஒரே இலக்கு என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பி.சந்தரமோகன், இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ், அரசு தோ்வுகள் இயக்குநா் கே.சசிகலா, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநா் ந.லதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.