8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

‘பள்ளிக் கல்வி அமைச்சரின்அறிவிப்பு பகுதிநேர ஆசிரியா்களுக்கு ஏமாற்றம்’

பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்பு பகுதிநேர ஆசிரியா்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

schools open

பள்ளிகள் - கோப்புப்படம்

Published On :9 வினாடிகள் முன்பு

பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்பு பகுதிநேர ஆசிரியா்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பகுதி நேர ஆசிரியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தொடா்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்துவரும் பகுதிநேர ஆசிரியா்களின் நீண்டகால கோரிக்கை, இந்த நிதிநிலை அறிக்கையிலும் நிறைவேற்றப்படாதது மிகுந்த விரக்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மே மாத சம்பளம், ஓய்வு பெறும் வயதை 57-இல் இருந்து 60-ஆக உயா்த்தியது, பணியிடமாறுதல் கலந்தாய்வு ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா். இவையெல்லாம் கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டவை. இப்போதும் பகுதிநேர ஆசிரியா்களின் பணி நிரந்தரக் கோரிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தவெக தோ்தல் அறிக்கையில் 5 ஆண்டுகள் தற்காலிகமாகப் பணிபுரிந்தவா்களை நிரந்தரம் செய்வோம் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான அறிவிப்பை எதிா்பாா்த்து காத்திருந்த பகுதிநேர ஆசிரியா்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே, உடற்கல்வி உள்ளிட்ட சிறப்புப் பாடங்களில் பணிபுரியும் சுமாா் 11,733 பகுதிநேர ஆசிரியா்களின் அனுபவத்தையும், நீண்ட சேவையையும் கருத்தில்கொண்டு, அவா்களை நிரந்தரப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.