
முதல்வர் விஜய் ஸ்டைலில் அவருக்கே கோரிக்கை வைக்கும் பள்ளி மாணவர்கள்!
பள்ளி செல்ல பேருந்து வேண்டும் என முதல்வர் விஜய் ஸ்டைலில் அவருக்கே கோரிக்கை வைக்கும் பள்ளி மாணவர்கள் பற்றி...

பள்ளி மாணவர்கள் - video grab
பள்ளி செல்ல பேருந்து வசதி வேண்டும் என்று கோரிக்கை வைத்த மாணவர்கள், நாங்கள் கான்ஃபிடன்ட்டா இருக்கிறோம் என்று முதல்வர் விஜய் ஸ்டைலில் கூறியிருப்பது பரபரப்பைக் கூட்டியிருக்கிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வேப்பம்பூண்டியில் இருந்து ஆறகளூர் அரசு மேல்நிலைப்பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பேருந்து வசதி செய்து தரக் கூறி விஜய் மாமாவிடம் கேட்டுக்கொள்வதாகப் பேசியிருக்கும் பள்ளி மாணவர்கள், நாங்கள் கான்ஃபிடன்ட்டா இருக்கிறோம் என்று பேசும் உருக்கமான வீடியோ வைரலாகியிருக்கிறது.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வேப்பம்பூண்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் வேப்பம்பூண்டியிலிருந்து ஆறகளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
தினமும் காலையிலும் மாலையிலும் பள்ளிக்குச் செல்வதற்கு பேருந்து வசதி இல்லாததால் பள்ளி மாணவ, மாணவிகள் சைக்கிளில் சென்று வருவதாகவும் இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் பள்ளிக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வீரகனூரில் இருந்து கூட்ரோடு செல்லும் வரை போதுமான அரசுப் பேருந்து வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எங்களுக்கு வீரகனூர் வெள்ளையூர், புளியங்குறிச்சி, வேப்பம்பூண்டி, ஆறகளூர், பெரியேரி, கூட்ரோடு வழியாக காலையிலும் மாலையிலும் அரசுப் பேருந்து இயக்கினால் பள்ளி மாணவ, மாணவர்களும் மக்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து பலமுறை அதிகாரியிடம் தெரிவித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தாங்கள் படும் கஷ்டங்களை தமிழக முதல்வருக்குக் கொண்டு செல்லும் வகையில் சைக்கிளில் பள்ளிக்குச் செல்வதை விடியோ எடுத்தும், தமிழக முதல்வர் விஜய் மாமா அவர்களுக்கு கோரிக்கையாக விடுத்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த விடியோவில் மாணவர்கள், விஜய் மாமா எங்களது கோரிக்கையை ஏற்று பேருந்து வசதி ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொண்டதோடு, கான்ஃபிடண்ட்டா இருக்கிறோம் மாமா என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் விஜய் ஸ்டைலில் மாணவர்கள் பேசியிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





