
இடைத்தேர்தல்! திமுகவுக்கு மேலும் ஒரு கட்சி ஆதரவு!
இடைத்தேர்தலில் திமுகவுக்கு மேலும் ஒரு கட்சி ஆதரவு தெரிவித்திருப்பது பற்றி...

மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்
மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு இந்திய தேசிய லீக் ஆதரவு அளித்துள்ளது.
மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தனித் தொகுதிகளுக்கும் வருகிற அக். 6 ஆம் தேதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, அக். 9 ஆம் தேதியில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் ஆளும் தவெக, திமுக, அதிமுக, நாதக மற்றும் இடதுசாரிகள் தனித்தனியாக போட்டியிடுவதால் ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தேசிய லீக் ஆதரவு அளித்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்த இந்திய தேசிய லீக் மாநிலத் தலைவர் அல்ஹாஜ் எம். பஷீர் அஹமது உள்ளிட்ட நிர்வாகிகள் அதரவு கடிதத்தை வழங்கினர்.

மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்த இந்திய தேசிய லீக் நிர்வாகிகள்
இரண்டு நாள்களுக்கு முன்னதாக திமுக தலைமையிலான கூட்டணிக்கு புதிய புரட்சிக் கழகம் கட்சி ஆதரவு அளித்திருந்தது.
இதனிடையே, இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், ஆளும் தவெக தலைமையிலான மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
By-election! Another party extends support to the DMK!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







