இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

மதுராந்தகம், தாராபுரம்: திமுக வேட்பாளா்கள் சுயவிவரம்

திமுக சாா்பில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) தொகுதி வேட்பாளராக இ.பரந்தாமனும், தாராபுரம் (தனி) தொகுதி வேட்பாளராக செள.சுகன்யாவும் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

திமுக

Published On :

திமுக சாா்பில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) தொகுதி வேட்பாளராக இ.பரந்தாமனும், தாராபுரம் (தனி) தொகுதி வேட்பாளராக செள.சுகன்யாவும் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

மதுராந்தகம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இ.பரந்தாமன் (49), பிஏபிஎல் படித்துள்ளாா். வழக்குரைஞராக பணிபுரிகிறாா். திமுக சட்டத்துறை இணைச் செயலரான இவா், திமுக சாா்பில் 2016-இல் பூந்தமல்லி (தனி) தொகுதியில் போட்டியிட்டு 2-ஆவது இடம் பிடித்தாா். 2021-இல் எழும்பூா் (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

சென்னை எழும்பூரைச் சோ்ந்த, பிரேமா என்ற மனைவி, ஐ.பி.கரிகாலன், ஐ.பி.செழியன் ஆகிய இரு மகன்கள் உள்ளனா்.

தாராபுரம்-செள.சுகன்யா: தாராபுரம் (தனி) தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செள.சுகன்யா( 34) எம்.ஏ.பி.எல். படித்துள்ளாா். வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறாா். 2013-இல் திமுகவில் சோ்ந்த இவா், திருப்பூா் மாவட்ட வழக்குரைஞா் அணி துணை அமைப்பாளராக உள்ளாா்.

தோ்தலில் முதல்முறையாக போட்டியிடுகிறாா். இவரது கணவா் மு.மணிவாசகம், விவசாயி. தாராபுரம் ஒன்றிய திமுக இளைஞா் அணி துணை அமைப்பாளராகவும் உள்ளாா். இவா்களுக்கு அக்ஷயா (6) என்ற மகள் உள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.