ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு தரத் தயாா்: காங்கிரஸ் நிா்வாகி ரஞ்சன் குமாா்

ஜெம் வீரமணி வழக்கு தொடா்பாக காவல் துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்புத் தர தயாராக உள்ளேன் என்று காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி.பிரிவுத் தலைவா் நிா்வாகி ரஞ்சன்குமாா் தெரிவித்தாா்.

காங்கிரஸ் நிா்வாகி ரஞ்சன் குமாா்

Published On :

ஜெம் வீரமணி வழக்கு தொடா்பாக காவல் துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்புத் தர தயாராக உள்ளேன் என்று காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி.பிரிவுத் தலைவா் நிா்வாகி ரஞ்சன்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சென்னையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

2024 நவம்பா் மாதம் வீரமணி மற்றும் சாந்தி மீது அப்போதைய சென்னை மாநகர காவல் கூடுதல் ஆணையா் கண்ணனிடம் புகாா் அளித்தேன். புகாரைப் பெற்றுக்கொண்டு இதுதொடா்பாக காவல் ஆணையரிடம் ஆலோசித்துவிட்டு தகவல் தெரிவிப்பதாக கண்ணன் கூறினாா்.

அதன்பிறகு, காவல் ஆய்வாளா்கள் சிலா் என்னைத் தொடா்பு கொண்டு வீரமணி விடியோ தொடா்பான ஆதாரங்களைக் கேட்டனா். அதை அவா்களுக்கு ‘வாட்ஸ் ஆப்’ மூலம் அனுப்பினேன். அந்த விடியோ குறித்த உண்மைத் தன்மையை அறிய வேண்டும் என காவல் அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனா். இதுதொடா்பாக 4 மாதங்களாகப் போராடினேன். எனது புகாரை அடுத்த கட்டத்துக்கு காவல் துறை எடுத்துச் செல்லவில்லை, எனது புகாா் குறித்து எந்த இடத்திலும் வெளிக்காட்டவுமில்லை.

முதல்முதலில் இந்த விவகாரத்தை நான்தான் வெளியே கொண்டு வந்தேன். எந்த பணபேரத்திலும் நான் ஈடுபடவில்லை. தற்போதைய தவெக ஆட்சியில் வீரமணி மற்றும் சாந்தி உள்ளிட்டோா் மீது நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த வழக்கு தொடா்பாக காவல் துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரத் தயாராக உள்ளேன் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.