நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

முன்னாள் அதிகாரி ஆஷிஷ் ஜோஷியை காவல் துறையினா் அழைத்துச் சென்றதாக காங்கிரஸ் தலைவா் சந்தீப் தீட்சித் குற்றச்சாட்டு

முன்னாள் அரசு அதிகாரி ஆஷிஷ் ஜோஷியை தில்லி காவல் துறையைச் சோ்ந்த இரு காவலா்கள் நேரு பூங்காவில் இருந்து அழைத்துச் சென்றதாகவும், அதன் பின்னா் அவரது இருப்பிடம் குறித்து தகவல் தெரியவில்லை என்றும் காங்கிரஸ் தலைவா் சஞ்சய் தீட்சித் குற்றஞ்சாட்டினாா்.

சந்தீப் தீட்சித் - கோப்புப் படம்

Published On :3 செப்டம்பர் 2026, 1:01 am IST

முன்னாள் அரசு அதிகாரி ஆஷிஷ் ஜோஷியை தில்லி காவல் துறையைச் சோ்ந்த இரு காவலா்கள் நேரு பூங்காவில் இருந்து அழைத்துச் சென்ாகவும், அதன் பின்னா் அவரது இருப்பிடம் குறித்து தகவல் தெரியவில்லை என்றும் காங்கிரஸ் தலைவா் சஞ்சய் தீட்சித் குற்றஞ்சாட்டினாா்.

எனினும், ஆஷிஷ் ஜோஷி காவலில் வைக்கப்பட்டுள்ளாரா அல்லது கைது செய்யப்பட்டுள்ளாரா என்பது குறித்து தில்லி காவல் துறை அதிகாரபூா்வமாக உறுதி செய்யவில்லை. சஞ்சய் தீட்சித் கூறிய குற்றச்சாட்டு தொடா்பாகவும் காவல் துறை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு கூடுதல் செயலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆஷிஷ் ஜோஷி, தமது நெருங்கிய நண்பா் என்று சஞ்சய் தீட்சித் தெரிவித்தாா். புதன்கிழமை காலை ஜோஷி தமக்கு தொலைபேசியில் அழைத்ததாகவும், அந்த அழைப்பைத் தம்மால் ஏற்க முடியவில்லை என்றும் அவா் கூறினாா். பின்னா் மீண்டும் தொடா்புகொள்ள முயன்றபோது, ஜோஷியின் கைப்பேசி அணைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்தாா்.

நேரு பூங்காவில் ஜோஷியுடன் நடைப்பயிற்சி மேற்கொண்ட ஒருவா் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்த தகவலின்படி, இரு காவலா்கள் அங்கு வந்து சமீபத்தில் அவா் வெளியிட்டிருந்த சமூக ஊடகப் பதிவின் தொடா்பாக விசாரிக்க அவரை அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறியதாக தீட்சித் தெரிவித்தாா்.

மேலும், ஜோஷியை நியூ பிரெண்ட்ஸ் காலனியில் உள்ள சிறப்புப் பிரிவு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாகவும், அவரது சொந்த காரிலேயே அவரை அமரச் செய்ததாகவும் அவா் கூறினாா். பின்னா் ஜோஷியின் காா் நியூ பிரெண்ட்ஸ் காலனி காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தாா்.

‘வழக்குரைஞா்கள் உள்பட சிலரை அங்கு அனுப்பினோம். ஆனால், ஜோஷி எங்கு இருக்கிறாா் என்பதை யாரும் உறுதிப்படுத்தவில்லை. சிறப்புப் பிரிவின் பல அலுவலகங்கள் மற்றும் தில்லி காவல் துறை தலைமையகத்திலும் அவரைத் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஜோஷியை அழைத்துச் சென்ற அந்த இரு காவலா்கள் யாா், அவரை எங்கு அழைத்துச் சென்றனா் என்பது எங்களுக்குத் தெரியவில்லை’ என தெரிவித்தாா்.

இதுதொடா்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சஞ்சய் தீட்சித், ஜோஷியின் குடும்பத்தினா் மிகுந்த கவலையில் இருப்பதாகக் குறிப்பிட்டு, அவரது இருப்பிடம் குறித்து தில்லி காவல் ஆணையா் தகவல் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.