வண்டலூர் சிறுமி வல்லுறவு! காவல்துறை செயல்படும் லட்சணம் இது தானா? இபிஎஸ் கேள்வி! ஞானேஷ் குமாருக்கு எதிராக அக். 2 முதல் போராட்டம்! அபிஜித் தீப்கே அறிவிப்பு!பள்ளியில் மாணவிக்கு கூட்டு வல்லுறவு! வசனம் பேசிய முதல்வர் எங்கே? உதயநிதி கேள்வி!ஜெம் வீரமணி வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு!இன்றுடன் காலாண்டுத் தேர்வுகள் நிறைவு! நாளைமுதல் விடுமுறைஜெம் வீரமணி வழக்கு: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து டிஜிபி உத்தரவு

23 ஆண்டுகளுக்குப் பின் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு புதிய யானை! தருமபுரம் ஆதீனம் வழிபாடு!

வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வந்த புதிய யானை..

Vaitheeswaran Koil

வைத்தீஸ்வரன் கோயிலுக்கு புதிய யானை - DPS

Published On :

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலுக்கு புதிய ஆண் யானை வருகை தந்துள்ளதையடுத்து, தருமபுரம் ஆதீனம் சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டு பழங்கள் கொடுத்து முத்தையா என திருநாமம் சூட்டினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான தேவாரப் பாடல் பெற்ற தையல்நாயகி அம்மன் சமேத வைத்தியநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான இக்கோயில் நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு உரிய முதன்மையான தலமாக விளங்குகிறது.

Story image

அறுபடை வீடுகளுக்கு இணையான முருகன் ஸ்தலமாகப் போற்றப்படும் இக்கோயிலில் செல்வ முத்துக்குமாரசுவாமி, அங்காரகன், தன்வந்திரி ஆகிய சுவாமிகள், தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். கோயிலில் உள்ள சித்தாமிர்த தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி அம்மனை வழிபாடு செய்து கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் திருசாந்துருண்டை எனும் தீர்த்த மண் உருண்டையை ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் 4448 வியாதிகள் குணமாகும் என்பது கோயில் ஐதீகம்.

கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வருகை புரிந்து வழிபாடு செய்து பல்வேறு சிறப்புகளை உடைய இவ்வாலயத்தில் பராமரிக்கப்பட்டு வந்த தையல்நாயகி என்ற யானை கடந்த 2003 ஆம் ஆண்டு மே மாதம் மதம் பிடித்ததால் டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் விடப்பட்டு அங்கு நோய்வாய்ப்பட்டு இறந்தது. இந்நிலையில் கோயிலுக்கு புதிய யானையை கொண்டு வர வேண்டும் என்று பல ஆண்டுகளாகப் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் வனத்துறையின் அனுமதி பெற்று அசாமில் இருந்து 13 வயது ஆண் யானை சென்னை சேவா டிரஸ்ட் மூலம் வாங்கப்பட்டு இன்று கோயிலை வந்தடைந்தது.

Story image

தருமபுரம் ஆதீனம் 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் யானையை வரவேற்றுச் சிறப்பு கஜ பூஜைகள் செய்து யானைக்கு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் யானைக்கு முத்தையா எனத் திருநாமம் சூட்டி அதன் காதில் மூன்று முறை கூறினார். பின்னர், பழங்கள் கொடுத்து தருமை ஆதீனம் வழிபாடு செய்தார். பக்தர்கள் புதிதாக வந்த யானையை ஆர்வமுடன் பார்வையிட்டு ஆசிர்வாதம் பெற்று யானையுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Story image

இதில் கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயில் நிர்வாகி செந்தில், சீர்காழி வனச்சரக அலுவலர் அயூப்கான், வனவர் ஆனந்தீஸ்வரர், மாவட்ட வளர்ப்பு யானைகள் குழு உறுப்பினர் உறுப்பினர் டாக்டர் சிவகணேசன், ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 23 ஆண்டுகளுக்குப் பிறகு வைத்தீஸ்வரன் கோயிலுக்கு புதிய யானை கொண்டு வரப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.