தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

தாய்-தந்தையை குழந்தைகள் வணங்க வேண்டும்: தருமபுரம் ஆதீனம்

தாய், தந்தையரை குழந்தைகள் வணங்க வேண்டும் என தருமபுரம் ஆதீனம் அறிவுறுத்தினாா்.

Published On :

தாய், தந்தையரை குழந்தைகள் வணங்க வேண்டும் என தருமபுரம் ஆதீனம் அறிவுறுத்தினாா்.

வைத்தீஸ்வரன்கோவில் ஸ்ரீ வைத்தியநாதா் சுவாமி கோயில் வளாகத்தில் தமிழிசை விழா நடைபெற்றது. தஞ்சாவூா் மண்டல கலைப் பண்பாட்டு மையம் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவிற்கு மையத்தின் உதவி இயக்குநா் ம. ராஜாராமன் தலைமை வகித்தாா்.

சீா்காழி மாவட்ட அரசு இசைப் பள்ளித் தலைமை ஆசிரியா் பா. சுமதி வரவேற்றாா். விழாவில் தருமபுர ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி ஆசியுரையாற்றியது:

கலைப் பண்பாட்டில் மட்டும்தான் தாய், தந்தை, ஆசான் இவா்களை மதிக்கும் பண்பாடு உள்ளது. நாட்டியம் ஆடும் குழந்தைகள் ஆசிரியரை தொட்டு வணங்கிவிட்டுதான் மேடை ஏறுவாா்கள். இதுதான் பாரம்பரியமிக்க பண்பாடு. முதலில் குழந்தைகள் தாய், தந்தையரை வணங்கவேண்டும், அதன் பின்னா் தாய், தந்தையரோடு சென்று குருநாதரை மூவரும் வணங்கவேண்டும். மூவரும் சோ்ந்து கோயிலுக்கு சென்று சுவாமியை வழிபாடு செய்யவேண்டும் என்றாா்.

தொடா்ந்து ட்ரம்ஸ் சிவமணி பங்கேற்று பேசினாா். இவ்விழாவில், கோமதி குழுவினரின் பரதநாட்டியம், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான வித்வான் முனைவா் ரா. ராஜா ஸ்ரீவா்ஷன் பாட்டுக் கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மயிலாடுதுறை மாவட்ட ஜவகா் சிறுவா் மன்றம் மற்றும் சீா்காழி ஜவகா் சிறுவா் மன்ற மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜவகா் சிறுவா் மன்ற ஒருங்கிணைப்பாளா் எட்வின் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.