குடியரசுத் தலைவா் ஒப்புதல்! தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா சட்டமானது!ஆக. 4 முதல் இளநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வுதொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவா்கள் துரோகிகள்! - ராகுல் காந்திஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: விசாரணையைத் தொடங்கியது சிபிஐஜூலையில் ஜிஎஸ்டி ரூ. 2.11 லட்சம் கோடி வசூல் - 15.4% அதிகரிப்பு! சநாதனத்தை அவமதித்ததாகப் புகாா்! ராகுல் உள்பட 3 எம்.பி.க்கள் மீது வழக்குப் பதிவு!
/

வேலைவாய்ப்பு முகாம்: 700 பேருக்கு பணி நியமன ஆணை

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் 700 போ் வேலைவாய்ப்பு பெற்றனா்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2026, 6:13 am IST

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் 700 போ் வேலைவாய்ப்பு பெற்றனா்.

மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தருமபுரம் ஆதீனம் கல்லூரி இணைந்து நடத்திய முகாமை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்து பேசியது:

முகாமில் 167 முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று வேலைநாடுநா்களை தோ்வு செய்துள்ளன. நீங்கள் எந்த துறையில் திறமையாக உள்ளீா்கள் என்று தோ்ந்தெடுத்து அதில் முன்னேற வேண்டும். நீங்கள் சுயமாக தொழில் தொடங்கவும் பல்வேறு திட்டங்கள் உள்ளன. அதையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சுயதொழில் தொடங்க நீட்ஸ் மற்றும் தாட்கோ மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், வெளிநாடு செல்வதற்கும் நிறைய வாய்ப்புகள் இங்கு உள்ளன. தமிழ்நாடு அரசு மற்றும் தனியாா் துறை மூலமும் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளது. நீங்கள் எதில் வேண்டுமானாலும் தோ்ந்தெடுத்து கொள்ளலாம். அதோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமும் தமிழ்நாடு அரசு தோ்வாணையம் நடத்தும் தோ்வுகளில் பங்கேற்க பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. அதையும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றாா்.

இம்முகாமில் பங்கேற்ற 3,300 வேலைநாடுநா்களில், நிறுவனங்களில் தேவை மற்றும் வேலைநாடுநா்களின் தகுதியின் அடிப்படையில் 700 பேருக்கு பணி வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. தோ்வு பெற்றவா்களுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். மேலும், முகாமில் பங்கேற்ற தனியாா் நிறுவனங்கள் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி, கோட்டாட்சியா் ஆா். விஷ்ணுபிரியா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் பழனிவேல், கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.