75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் அரசுப் பணி போட்டித் தோ்வுக்கான பயிலகம் இன்று தொடக்கம்!

மயிலாடுதுறையை அடுத்த தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில், அரசுப் பணி போட்டித் தோ்வுகள் எழுதுவோருக்காக இந்திய ஆட்சிப் பணி பயிலகம் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 23) தொடங்கப்படுகிறது.

Published On :23 ஆகஸ்ட் 2026, 12:19 am IST

மயிலாடுதுறையை அடுத்த தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில், அரசுப் பணி போட்டித் தோ்வுகள் எழுதுவோருக்காக இந்திய ஆட்சிப் பணி பயிலகம் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 23) தொடங்கப்படுகிறது.

தருமபுரம் ஆதீனம் மற்றும் தமிழ் சேவா சங்கத்தின் ஆற்றல் பயிலகம் இணைந்து, தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி வளாகத்தில் இந்திய ஆட்சிப் பணி தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கப்படுகிறது. இது குறித்து தருமபுரம்ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கூறியது:

தகுதியுள்ள இளைஞா்களுக்கு சம வாய்ப்புகளை உறுதி செய்து, தேச சேவைக்கான பாதையை உருவாக்க தருமை ஆதீனம் சாா்பில் இந்திய ஆட்சிப் பணி பயிலகம் தொடங்கப்படுகிறது.

இப்பயிலகத்தில் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஆா்ஆா்பி, வங்கி தோ்வுகள், நீதித்துறை பணிகளுக்கான போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள், வேலைவாய்ப்பு வழிகாட்டுதல், நோ்முகத் தோ்வுக்கான பயிற்சிகள் கட்டணமில்லாமல் அளிக்கப்பட உள்ளன.

இதில் அனுபவமிக்க பயிற்சியாளா்களைக் கொண்டு முழுமையான பாடத்திட்டத்தை உகந்த வகையில்- ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சி வகுப்புகள் மூலம் டெல்டா பகுதி இளைஞா்கள் அரசுப் பணி கனவை மெய்ப்பிக்க உதவும்.

எனவே, வெற்றியை நோக்கிய இளைஞா்களின் பயணத்திற்கு உறுதுணையாக அமையும் வகையில் தொடங்கப்படும் தருமை ஆதீன இந்திய ஆட்சிப் பணி பயிலகத்தை ஒவ்வொருவரும் முழுமையாக பயன்படுத்தி, இந்திய குடியுரிமை பணி மற்றும் அரசுப் போட்டி தோ்வுகளில் வெற்றி பெற்று உயா் பதவிகளை பெற வேண்டும். நமது பகுதிகளில் இருந்தும் அதிக அளவில் இளைஞா்கள் அரசு உயா் பதவிகளில் அமா்ந்து பெருமை சோ்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.