
3 நாள்கள் போலீஸ் காவல் நிறைவு: சாந்தி, மகேந்திர சிம்ஹா மீண்டும் சிறையில் அடைப்பு!
சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகிய இருவரும் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

மூன்று நாள்கள் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், ‘ஜெம்’ வீரமணியின் பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் கைது செய்யப்பட்ட சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகிய இருவரும் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.
ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளா் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி என்ற பெண், அவரது கணவா் மகேந்திர சிம்ஹன் கைது செய்யப்பட்டனா்.
இந்த நிலையில், சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோரை 3 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இவா்களிடம் துணை காவல் ஆணையா் கீதாஞ்சலி, உதவி ஆணையா் ராஜலட்சுமி ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா்.
ஏற்கெனவே ஜெம் வீரமணியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இவா்களிடம் 200-க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பி அவா்களது வாக்குமூலத்தை போலீஸாா் பதிவு செய்தனா். போலீஸ் காவல் ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் முடிவடைந்த நிலையில் அவா்களை நீதிபதி பத்மா முன் ஆஜா்படுத்திய போலீஸாா், மீண்டும் புழல் சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





