மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குமேற்கு வங்கம்: மமதா ஆதரவு எம்எல்ஏ காா் மீது மீண்டும் தாக்குதல்! பொது சட்டம் - ஒழுங்கு தொடர்பான சில தகவல்களைப் பெற விதிக்கப்பட்ட விலக்கு வாபஸ்பட்டாசு விலை 25% உயர்வு

உயிர் அச்சத்தில் உள்ள மக்களின் குரல் சொரணையற்ற அரசின் காதுகளுக்கு கேட்கவில்லையா? கனிமொழி கேள்வி!

மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக கனிமொழி எம்பி பதிவிட்டுள்ளார்.

முதல்வர் விஜய் - திமுக எம்.பி. கனிமொழி - கோப்புப் படம்

Published On :

மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக கனிமொழி எம்பி பதிவிட்டுள்ளார்.

மதுராந்தகம் அருகே கொங்கரை பகுதியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி சிறுமியை மர்ம நபர்கள் வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியின் பெற்றோர் வெளியூர் சென்றிருந்த நிலையில், இந்தக் கொடூரச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. இதில், சந்தேகத்தின் பேரில் அப்பகுதியில் உள்ள 10 பேரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தவெக அரசு பொறுப்பேற்றது முதல் இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளன.

இந்த நிலையில், திமுக எம்பி கனிமொழி இதுபற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ”மதுராந்தகம் அருகே கொங்கரையில் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

இன்னும் எத்தனை கொடுஞ்செய்திகளை தமிழ்நாட்டு மக்கள் கேட்க வேண்டும் என்று இந்த தவெக அரசு எதிர்பார்க்கிறது?

உயிரச்சத்தில் உறைந்து போய் உள்ள மக்களின் குரல் கூட இந்த சொரணையற்ற அரசின் காதுகளுக்கு கேட்கவில்லையா?

உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய பாதுகாப்பும் நீதியும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Kanimozhi has posted about the sexual assault of a girl with a disability.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.