
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறை - பிரதிப் படம்
விழுப்புரம், செப்.21: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சிறுமியை காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து விழுப்புரம் மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
செஞ்சி வட்டம், பொன்பத்தி கிராமத்தைச் சோ்ந்தவா் பெ.சாமிக்கண்ணு (33). இவரது மனைவி இறந்துவிட்டாராம். இந்த நிலையில், சாமிக்கண்ணு செஞ்சி பகுதியைச் சோ்ந்த 16 வயதுடைய சிறுமியிடம் காதலிப்பதாகக் கூறி, அவரைக் காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், செஞ்சி போலீஸாா் கடந்த 9.5.2020 அன்று சாமிக்கண்ணு மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா். இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை, விழுப்புரம் மகளிா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், சாமிக்கண்ணு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை விசாரித்த மகளிா் நீதிமன்ற நீதிபதி எழிலரசி, வழக்கில் தொடா்புடை சாமிக்கண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ.ஒரு லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



