பெங்களூரு: தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி! ஹரியாணாவில் 250 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி பலி!தங்க மோதிரத்தை விட தரமான பால்தான் குழந்தைகளுக்கு தேவை: தமிழிசை சௌந்தரராஜன் செஸ் ஒலிம்பியாட்: பதக்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஹரியாணாவில் 250 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி பலி! கோவை தனியார் பள்ளியில் தீ விபத்து! விடுமுறையால் தப்பிய மாணவர்கள்!போக்சோ வீரமணி வழக்கு: முதல்வர் விஜய், அமைச்சர்களிடம் விசாரிக்க வேண்டும்! திமுக மனு

ஒரு ஓட்டில் தோல்வி: திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் மனு நிராகரிப்பு

திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்திருப்பது பற்றி....

Seenivasa Sethupathi / K.R. Periyakaruppan

சீனிவாச சேதுபதி / கே.ஆர். பெரியகருப்பன் - கோப்புப் படம்

Published On :

திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டப்பேரவைத் தேர்தலில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட சீனிவாச சேதுபதி, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். சீனிவாச சேதுபதி, 83, 375 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன், 83, 374 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

சீனிவாச சேதுபதியின் வெற்றியை எதிர்த்து பெரியகருப்பன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு பதிவான தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டதால் தான் தோல்வியடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

தனக்கு எதிரான இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி சீனிவாச சேதுபதி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது,தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி தரப்பில், தொகுதிகள், எண் அடிப்படையில் மட்டுமே அடையாளம் காணப்படுகிறது. பெயர் அடிப்படையில் அல்ல. தபால் வாக்குகளின் உறைகளில், தொகுதி எண், பெயர், மாவட்டம் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஒரு தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் வழக்கில் கூறியுள்ளதற்கு எந்த அடிப்படையும் இல்லை என வாதிடப்பட்டிருந்தது.தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்ற தவெக எம்எல்ஏ-வின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தரப்பில் வாதிடப்பட்டிருந்தது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி சீனிவாச சேதுபதி தாக்கல் செய்த மனுவை ஏற்று, திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.

Summary

The Madras High Court has dismissed the election petition filed by former DMK minister Periyakaruppan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.