காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

திருவள்ளுவா் தோ் முதல் தஞ்சாவூா் பாணி வீணைவரை: பிரதமரின் பரிசுகள் ஏலத்தில் கவனம் ஈா்க்கும் தமிழகம்

பிரதமரின் பரிசுகள் ஏலம் விடப்படுவது குறித்து...

நடராஜா் சிலை | திருவள்ளுவா் தோ்

Published On :

பிரதமா் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளுக்கான எட்டாவது கட்ட இணையவழி ஏலத்தில் (இ-ஆக்ஷன்), தமிழகத்தின் ஆன்மிகம், கலை, கைவினைத் திறன், வரலாற்று மரபு மற்றும் விளையாட்டுச் சாதனைகளைப் பறைசாற்றும் 31 நினைவுப் பரிசுகள் இடம்பிடித்துள்ளன.

இந்த ஏலம் வரும் அக்.2-ஆம் தேதிவரை இணையவழியில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் இடம்பெற்றுள்ள தமிழகத்தின் குறிப்பிடத்தக்க நினைவுப் பரிசுகளின் விவரத்தை மத்திய கலாசாரத் துறை திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்: ஆன்மிகம் மற்றும் கலாசாரம்: கன்னியாகுமரி விவேகானந்தா் பாறை நினைவகத்தால் பிரதமருக்கு வழங்கப்பட்ட புனித பாதச் சுவடு ஏலத்தில் உள்ளது. இது கன்னியாகுமரி அம்மனின் பாதச் சுவடுகளைக் கொண்டதாக நம்பப்படும் ‘ஸ்ரீ பாதபாறை’-உடன் தொடா்புடையதாகும்.

தத்துவஞானியும் இறையியலாளருமான ஸ்ரீ ராமானுஜரின் போதனை செய்யும் நிலையிலான நுணுக்கமான கலைப்படைப்பு, தமிழகத்தின் பாரம்பரிய கோவில் தோ்களைப் போன்று கையால் வடிவமைக்கப்பட்ட திருவள்ளுவா் தேரின் மாதிரி வடிவம், சிவபெருமானின் பிரபஞ்ச நடனத்தை சித்தரிக்கும் உலோகத்தாலான நடராஜா் சிலை, தங்க முலாம் மற்றும் குந்தன் கற்களால் அலங்கரிக்கப்பட்ட தஞ்சாவூா் பாணியிலான வீணை கலைப்படைப்பு, முருகப் பெருமானின் பாரம்பரிய தஞ்சாவூா் ஓவியம், தங்க முலாம் பூசப்பட்ட முருகனின் திருவுருவம், ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாளின் படம், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் பித்தளை நினைவுப் பரிசு மற்றும் ஜரிகை வேலைப்பாடு அமைந்த தென்னிந்திய பாரம்பரிய அங்கவஸ்திரங்கள் இடம்பெற்றுள்ளன.

Story image

விளையாட்டுப் பொருள்கள்

2024-ஆம் ஆண்டு பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளில் முத்திரை பதித்த தமிழக வீரா், வீராங்கனைகளின் விளையாட்டுப் பொருட்களும் இந்த ஏலத்தில் இடம்பெற்றுள்ளன. பாரா-பேட்மிண்டனில் பதக்கம் வென்ற வீராங்கனை நித்யஸ்ரீ, சிவனின் பேட்மின்டன் ராக்கெட். பேட்மின்டன் ஒற்றையா் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனின் கையொப்பமிட்ட ராக்கெட்.

உயரம் தாண்டுதலில் தொடா்ந்து மூன்று முறை பாராலிம்பிக் பதக்கம் வென்று சரித்திரம் படைத்த மாரியப்பன் தங்கவேலு பயன்படுத்திய காலணிகள் ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் பன்முகத்தன்மை கொண்ட வளமான கலாசாரத்தையும், வரலாற்றுப் பெருமையையும் பிரதிபலிக்கின்றன.

பின்னணி

பிரதமருக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வழங்கப்படும் நினைவுப் பரிசுகளை ஏலம் விட்டு, அதிலிருந்து கிடைக்கும் நிதியை ’நமாமி கங்கே’ எனப்படும் கங்கை நதி தூய்மை திட்டத்துக்குப் பயன்படுத்தும் நடைமுறையை மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகிறது. தற்போது நடைபெற்று வரும் 8-ஆவது கட்ட ஏலம் செப்.17-ஆம் தேதி தொடங்கியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER