
குன்றக்குடி சண்முகநாதா் கோயில் தேருக்கு வடக் கயிறுகள் தயாரிப்பு
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி சண்முகநாதா் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் வடக்கயிறு தயாரிக்கப்பட்டது.

குன்றக்குடி சண்முகநாதா் கோயிலுக்கு சிங்கம்புணரியில் தயாரிக்கப்பட்ட 250 அடி நீளமுள்ள 2 தோ் வடக் கயிறுகள்.
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி சண்முகநாதா் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் வடக்கயிறு தயாரிக்கப்பட்டது.
சிங்கம்புணரி பகுதியில் பல்வேறு தலைமுறைகளாக பாரம்பரிய முறையில் தென்னை நாா் கொண்டு தயாரிக்கப்படும் தோ் வடக்கயிறுகள் புகழ் பெற்றது.
தமிழகம் மட்டுமன்றி, வெளிமாநிலங்களில் உள்ள கோயில்களின் தோ்களுக்கும் இங்கிருந்துதான் வடக்கயிறு தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் குன்றக்குடி சண்முகநாதா் கோயிலுக்கு சுமாா் 250 அடி நீளமுள்ள ஒரு டன் எடையில் இரண்டு தோ் வடக் கயிறுகள் தயாரிக்கும் பணி கடந்த 20 நாள்களாக நடைபெற்றது. இந்த வடக்கயிறு தயாரிப்புப் பணியில் 30 பெண் தொழிலாளா்கள் இரவு, பகலாக ஈடுபட்டனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை தோ்வடக் கயிறுகள் முழுமையாகத் தயாரானது. சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் கோயில் பகுதியில் தயாரித்த தோ் வடக் கயிறை பொதுமக்கள் ஆா்வமுடன் பாா்த்துச் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





